சரித்திரத்தில் இடம் பெறப்போகும் கன்னியாகுமரி மாவட்டம்.!! தமிழக அரசின் பெரிய சாதனை.!! விற்பனை பட்டியல் வெளியீட்டால் அதிர்ச்சிக்கு உள்ளான மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கடைக்கோடி ஊர் மற்றும் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 92 அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் நாளொன்றுக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய் முதல் இரண்டே முக்கால் கோடி ரூபாய்க்கு மதுபானமானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும்., பண்டிகை காலங்களில் மது விற்பனையானது ஜோராக நடைபெறுகிறது என்றுதான் கூற வேண்டும். 

அந்த வகையில்., புத்தாண்டு தினத்தை ஒட்டிய மூன்று நாட்களில் சுமார் ரூ.9 கோடியே 89 இலட்சத்து 645-க்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனவரி மாதம் 2018 ம் வருட தொடக்கத்தில் இருந்தே சிறப்பான விற்பனை நடந்து வந்த நிலையில்., வருட முடிவில் அதாவது டிசம்பர் மாதம் வரை ரூ.934 கோடியே 1 இலட்சத்து 104-க்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. 

கடந்த வருடத்தில் டிசம்பர் மாதம் மட்டும் ரூ.83 கோடியே 24 இலட்சத்து 73 ஆயிரத்து 885-க்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அந்த வருடத்தின் அதிகப்படியான மதுபானங்கள் விற்பனை செய்த மாதத்தின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. 

பெப்ரவரி மாதத்தில் குறைந்த பட்சமாக விற்பனையான மதுபானங்கள் ரூ.71 கோடியே 58 இலட்சத்து 23 ஆயிரத்து 915-க்கு விற்பனை ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து பிற மாதங்களில் விற்பனையான மதுபானங்களின் விற்பனை தொகை பின்வருறுமாறு வழங்கப்பட்டுள்ளது. 

ஜனவரி மாதத்தை பொறுத்த வரையில்., ரூ.76 கோடியே 17 லட்சத்து 30 ஆயிரத்து 745-க்கு விற்பனையும்., மார்ச் மாதத்தை பொறுத்த வரையில் ரூ.77 கோடியே 90 லட்சத்து 31 ஆயிரத்து 644-க்கு விற்பனையும்., ஏப்ரல் மாதத்தை பொறுத்த வரையில் ரூ.81 கோடியே 52 லட்சத்து 67 ஆயிரத்து 355-க்கு விற்பனை ஆகியுள்ளது. 

மே மாதத்தை பொறுத்த வரையில்., ரூ.79 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரத்து 825-க்கு விற்பனையும்., ஜூன் மாதத்தை பொறுத்த வரையில் ரூ.78 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 590-க்கு விற்பனையும்., ஜூலை மாதத்தை பொறுத்த வரையில்., ரூ.79 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 625-க்கு விற்பனையும்., ஆகஸ்டு மாதத்தை பொறுத்த வரையில்., ரூ.76 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 960-க்கு விற்பனையும் நடந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தை பொறுத்த வரையில்., ரூ.79 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 355-க்கு விற்பனையும்., அக்டோபர் மாதத்தை பொறுத்த வரையில்., ரூ.76 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரத்து 970-க்கு விற்பனையும்., நவம்பர் மாதத்தை பொறுத்த வரையில்., ரூ.74 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 205-க்கு விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IN KANNIYAKUMARI DISTRICT GOVT WINE SHOP SALES HIGH


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->