பெண் காவல் அதிகாரியின் சட்டையை பிடித்து இழுத்து அவதூறாக பேசிய திமுக பிரமுகர்.! தேர்தலின் போது அரங்கேறிய கொடூரம்.!!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற மக்களவை தேர்தல் சமயத்தில்., கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.  

அந்த சமயத்தில்., சுமார் 3 மணியான நேரத்தில் வாக்குப்பதிவு குறைவாக இருந்த சமயத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்த சிலர் மதுவை அருந்தி அந்த இடத்தில் சலம்பலில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கும்., அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர் தகராறில் ஈடுபட்டு வந்தவர்களை சம்பவ இடத்தை விட்டு செல்ல கூறியுள்ளார். 

இதனை கேட்டு ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் காவல் அதிகாரியை அவதூறாக பிசெய்யத்தை அடுத்து., இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் கோபத்திற்கு உள்ளான போதை நபர்கள்., பெண் காவலரின் ஆடையை பிடித்து தகராறு செய்துள்ளனர். இவர்களின் பிடியில் இருந்து தப்பிப்பதற்கு காவல் அதிகாரி அவர்களின் கையை அடித்துள்ளார். 

இதனால் ஏற்பட்ட கடும் வலியை அடுத்து போதை ஆசாமிகள் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளனர்., பின்னர் இது குறித்து பெண் காவல் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., இது குறித்த விசாரணையில் ஈடுபட துவங்கினர். 

அந்த விசாரணையில்., காவல் அதிகாரியிடம் தகராறு செய்த நபர் விஜய் என்பதும்., இவர் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த நபர் என்பதும் தெரியவந்தது. இவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., அவனை தீவிரமாக தேடி வந்த நிலையில்., நேற்று மாலை அவனை கைது செய்து இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kallakurichi election booth dmk party member sexual harassment in lady police officer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->