தேர்வுக்கு சென்ற பள்ளி மாணவிகளை கடத்திய வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு பண்ணைப்பட்டியை சார்ந்தவர் வனிதா (வயது 17). இந்த பகுதிக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரத்தை சார்ந்தவர் காவியா (வயது 17). இவர்கள் இருவரும் அங்குள்ள வடமதுரை அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தனர். 

இந்த மாதத்தில் தேர்வுகள் நடைபெற்றதை அடுத்து தேர்வு நேரத்தில் பள்ளிக்கு சென்று பின்னர் இருவரும் வீடு திரும்புவார்கள். மேலும்., இருவரும் பள்ளி பருவ தோழிகள் ஆவார்கள். இந்நிலையில்., கடைசி தேர்வு எழுத சென்ற மாணவிகள் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. 

சிறிது நேரத்தில் வீட்டிற்க்கு வந்துவிடுவார்கள் என்று எண்ணி பெற்றோர்கள் இருந்த நிலையில்., இவர்கள் இருவரும் இல்லத்திற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இவர்களை அங்குள்ள பகுதியில் தேடி அலைந்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் தேடியும் காணாததால் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

சம்பவத்தன்று அவர்கள் பயன்படுத்திய அலைபேசியின் எண்ணை அறிந்த காவல் துறையினர் சோதனை செய்ததில்., அவர்கள் ஹைதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் அதே பகுதியில் கட்டுமான வேலை பார்த்து வரும் நாட்ராயன் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் பாலமுருகன் என்பவரும் கடத்தி சென்ற தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து., மாணவிகளை மீட்டு வந்தனர். இந்த நேரத்தில் பெற்றோர்கள் மதுரை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்ததால்., அவர்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindukal girls kidnapped by her boy friend police rescue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->