பிளான் போட்டு தூக்கப்பட்ட அத்தை மகள்.! பறக்கும் படையின் பயர் சேஸிங்கால் தப்பித்த மாணவி .!! மகிழ்ச்சியில் மாணவியின் பெற்றோர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ம் தேதியன்று பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடவிருப்பதை அடுத்து., அனைத்து கட்சியினரும் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துபோகக்கூறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து., வரும் தேர்தலை எதிர்கொள்வதற்கு கடுமையான களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சமயத்தில் வாக்கிற்கு கொடுக்கப்படும் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு., பல இடங்களில் கோடிக்கணக்கான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

சாலையில் வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தையும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் பட்சத்தில் கடும் சோதனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில்., பள்ளி மாணவியை பள்ளி சீருடையில் கடத்தி சென்ற கும்பலை பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் உள்ள கெச்சானிப்பட்டி பிரிவிற்கு அருகேயுள்ள பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில்., அந்த சாலையில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில்., காரில் பள்ளி சீருடையுடன் மாணவி ஒருவரும் அவருடன் மூன்று வாலிபரும் இருந்துள்ளனர். 

இவர்களின் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் உடனடியாக அவர்கள் வாகனத்தில் இருந்த பையை பிரித்து சோதனையிட்ட சமயத்தில்., திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு தேவையான பட்டுசேலை., மாங்கல்யம்., மாப்பிள்ளைக்கு வேட்டி மற்றும் சட்டை ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூரை சார்ந்த ராஜ்குமார் என்பதும்., தனது அத்தை மகள் 10 ம் வகுப்பு பயின்று வந்த நிலையில்., தேர்வுகள் நிறைவு பெற்ற பின்னர் திருமணம் செய்வதற்கு அவரை காரில் கடத்தி வந்ததும் தெரிவந்துள்ளது. மேலும்., இவர்களுக்கு உடந்தையாக காரில் வந்திருந்த தாமரை செல்வன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை வடமதுரை காவல் துறையினரிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., ராஜ்குமார் மற்றும் அவனது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும்., 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்ற நிலையில்., தேர்வை எழுதாமலேயே மாணவி கடத்தி வரப்பட்டதும்., பின்னர் காவல் நிலையத்தில் கதறியழுத்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் மாணவியை கடத்தி வந்தவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindukal girl kidnapped his relation to marriage


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->