நீதிமன்றம் கொடுத்த தண்டனையால் பெரும் பரபரப்பு.! கடலூரில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய 16 கொடூரர்கள்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014 ம் வருடம் 7 ம் வகுப்பு பயின்று வந்த 13 வயதுடைய மாணவியும்., 8 ம் வகுப்பு பயின்று வந்த 14 வயதுடைய மாணவியும் இணைபிரியாத தோழிகளாக இருந்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவருள் 7 ம் வகுப்பு பயின்று வந்த மாணவி பெற்றோரை இழந்தவர் என்பதால்., இவருடைய பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளியில் பயின்று வந்துள்ளார். இவர்கள் இருவரும் பள்ளிக்கு அருகிலுள்ள இட்லி கடைக்கு சென்று பலகாரங்கள் வாங்கி உண்பது வழக்கம். 

இந்நிலையில்., வழக்கம் போல மாணவி ஒருநாள் கடைக்கு சென்ற போது., அங்கு கடையின் உரிமையாளர் செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி (40) மற்றும் அவருடைய கள்ளக்காதலன் (திருக்கண்டேஸ்வரத்தை சார்ந்த ஆனந்தராஜ்., வயது 24) உடன் உல்லாசமாக இருந்ததை பார்த்துள்ளார். 

இதனை கண்டு கொண்ட தனலட்சுமி விசயம் வெளியே தெரிந்தால் என்ன ஆகும் என்று என்னை மாணவியிடம் நைசாக பேசி அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மாணவியை ஆனந்தராஜுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இந்த பழக்கத்தை வழக்கமாக மாற்றிய ஆனந்தராஜ் மாணவியை அவ்வப்போது மிரட்டி உல்லாசம் அனுபவித்தும் இல்லாமல்., தனது நண்பர்களுக்கும் விருத்தாகியுள்ளான். 

இதனால் மாணவியின் உடல் நிலையில் கடுமையான பாதிப்புகள் ஏற்படவே., தனலட்சுமியிடம் தன்னை விட்டுவிடும் படி கதறியழுத்துள்ளார். இதனை கண்டு கொள்ளாத தனலட்சுமி அவருடைய 14 வயது தோழியையும் அழைத்து வரக்கூறி மிரட்டி., இருவரையும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இறையாகியுள்ளார்.

மேலும்., மாணவியை விருத்தாசலத்தில் இருக்கும் விபசார புரோக்கரான கலாவின் இல்லத்திற்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும்., திட்டக்குடியில் இருக்கும் மதபோதகர் அருள்தாஸ் என்பவரின் இல்லத்திற்கு மாணவிகளை அனுப்பிவைத்த தனலட்சுமி., அங்கு வைத்து மதபோதகர் மாணவிகளை சீரழித்துள்ளார்.  

இதற்கு அடுத்தபடியாக கலாவும் - புரோக்கரும் இணைந்து மாணவிகளை மிரட்டி விழுப்புரம்., சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அழைத்து சென்று விபசார தொழிலை நடத்தி வந்துள்ளனர். மேலும்., கடைசியாக வடலூர் பகுதியில் இருந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி என்பவர்களுக்கு விற்றுள்ளனர். அங்குள்ள வாடகை வீட்டில் வைத்து மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். 

அங்கிருந்த தப்பிக்க திட்டம் போட்ட மாணவிகள்., வடலூரில் இருந்து தப்பித்து திட்டக்குடிக்கு வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தங்களுக்கு நடந்த இன்னல்களை கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில் சுமார் 19 பேரின் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்., அவர்களின் விபரம்: 

1 ) அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் இடையாக்குறிச்சியை சார்ந்த சதீஷ் குமார் (வயது 28).,
2 ) சதீஷ் குமாரின் மனைவி தமிழரசி (வயது 27).,
3 ) வித்துத்தாசலத்தை சார்ந்த கலா (வயது 48).,

4 ) திட்டக்குடி பெரியார் நகரை சார்ந்த செந்தில் குமாரின் மனைவி தனலட்சுமி (வயது 40).,
5 ) விருத்தாசலத்தை சார்ந்த மதபோதகர் அருள்தாஸ்.,
6 ) ஊ.மங்களம் அருகிலுள்ள கட்டுணாங்குறிச்சியை சார்ந்த ஸ்ரீதர்.,  

7 ) வளவனூர் கூட்டுறவு நகரை சார்ந்தவர் சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி பாத்திமா (வயது 35).,
8 ) பண்ரூட்டியை சார்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி மகா என்ற மகாலட்சுமி (வயது 20).,
9 ) நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டையை சார்ந்தவர் ராதா என்ற கிரிஜா (வயது 35).,

10 ) விருத்தாசலத்தை சார்ந்த ஷர்மிளாபேகம் (வயது 34).,  
11 ) வடலூர் ஆபத்தராணபுரத்தைச் சார்ந்த அஞ்சாப்புலி என்பவரின் மனைவி கவிதா என்கிற இராஜலட்சுமி (வயது 34).,
12 ) சேலத்தில் உள்ள அயோத்தியபட்டினத்தை சார்ந்த அன்பழகன் (வயது 28).,

13 ) அன்பழகனின் மனைவி அமுதா (வயது 28).,
14 ) திட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சார்ந்தவர் மோகன் என்கிற மோகன்ராஜ் (வயது 28).,
15 ) திட்டக்குடியை சார்ந்த மதிவாணன் (வயது 23).,
16 ) விருத்தாசலத்தை சார்ந்த அன்பு என்கிற செல்வராஜ்., 

17 ) திருகண்டேஸ்வரத்தை சார்ந்த ஆனந்தராஜ்., 
18 ) விருத்தாசலம் புதுப்பேட்டை பாரதிநகரை சார்ந்த பாலசுப்ரமணியன் (வயது 42).,
19 ) பண்ரூட்டி செக்கு மேட்டுத்தெருவை சார்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி ராதா என்கிற ராதிகா (வயது 30)....

மேற்கூறிய நபர்கள் மீது "போக்ஸோ" சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த திட்டக்குடி காவல் துறையினர்., வழக்கின் குற்றவாளிகளில் சதீஷ் குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில்., மீதமுள்ள 17 பெரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த வழக்கு விசாரணையில் ஏற்பட்ட தொய்வின் கர்ணாம்க வழக்கை சி.பி.சி.ஐ.டி வழக்காக மாற்றி விசாரணை செய்யவேண்டும் என்று 14 வயதுடைய மாணவியின் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 2016 ம் வருடத்தின் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டனர்., இந்நிலையில்., காவல் துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையின் முடிவில் கடலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

மாணவிகள் இருவரும் பாதுகாப்பு காரணம் கருதி சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில்., மாணவி ஒருவர் மேல்படிப்பு பயின்று வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடைக்கால நிவாரணம் வழங்கக்கூறி அரசு வழக்கறிஞர் க.செல்வப்ரியா கடலூர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் முடிவில் ரூ.2 இலட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கக்கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில்., நேற்று 17 பேரும் கடலூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர்களின் குற்றம் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளில் 16 பேருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும்., விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மகா என்கிற மகாலட்சுமி சதீஷ்குமாரால் இதுபோன்று பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை மட்டும் விடுதலை செய்வதாக தனது தீர்ப்பை வழங்கினார். 

மேலும்., இவர்களுக்குரிய தண்டனை விபரங்களை வரும் திங்கள்கிழமை (07/01/19) அன்று அறிவிப்பதாக நீதிபதி லிங்கேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில்., தற்போது அவர்களுக்கான தண்டனை விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவியை பாலியல் தொழிலுக்கு மிரட்டி வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய அனைவருக்கும் தண்டனையை அறிவித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு: 

1 ) விருத்தாசலத்தை சார்ந்த மதபோதகர் அருள்தாஸூக்கு 30 வருடங்கள் சிறை தண்டனையும்., ரூ.5 இலட்சம் அபாரதத் தொகையும் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. 
2 ) கலா மற்றும் தனலட்சுமிக்கு இரட்டை ஆயுள் தண்டனையாக சுமார் 48 வருடங்கள் சிறை தண்டனை விதித்து சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
3 ) ஸ்ரீதருக்கு சுமார் 20 வருட சிறை தண்டனையும்., ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 ) பாத்திமாவிற்கு 20 வருட சிறை தண்டனையும்., ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  
5 ) ராஜலட்சுமிக்கு 20 வருட சிறை தண்டனையும்., ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தண்டனை விபரங்களில் 16 நபர்களில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட வழக்கறிஞர் க.செல்வபிரியா அவருக்கு பாராட்டுக்கள்.... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore forced to two girls prostitution a wrong members court order to jail


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->