கடலூரில்., கழுத்தை நெரித்த கடன் தொல்லை.! கணவன்., குழந்தைகளுக்கு தெரியாமல் கள்ளநோட்டு தயாரிப்பு.!! கைது செய்யப்பட்ட பட்டதாரி பெண்.!!  - Seithipunal
Seithipunal


கடலூரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கடைக்கு வருகை தந்த பெண்., பேருந்து நிலையத்தில் பழங்கள் விற்பனை செய்யும் குமுதா என்ற பெண்ணிடம் பழங்களை வாங்கி விட்டு., அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை வழங்கியுள்ளார். அந்த சமயத்தில் குமுதாவிடம் ரூ.2 ஆயிரத்திற்கு சில்லறை இல்லை என்பதால்., அங்கு பழம் விற்பனை செய்யும் நபர்களிடம் கேட்டுள்ளார். 

அந்த சமயத்தில் தமிழரசி என்ற பக்கத்து கடை பெண்மணி ரூ.2 ஆயிரத்தை வாங்கி பார்த்ததில் அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்., அருகில் இருக்கும் கடைக்கு சென்று மாற்றி வருவதாக கூறி விட்டு., கமுக்கமாக அங்கிருக்கும் புறக்காவல் நிலையத்திற்கு சென்று காவல் துறை அதிகாரிகளிடம் பணத்தை வழங்கி விஷயத்தை கூறியுள்ளார். 

இதனையடுத்து பணத்தை வாங்கி பார்த்த காவல் துறை அதிகாரிகள்., ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு என்பதை உறுதி செய்ததை அடுத்து., அந்த பெண்ணை கையும் களவுமாக பிடிப்பதற்கு முடிவு செய்து உடனடியாக., திருப்பதிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். 

இந்த விஷயத்தை அறிந்த பெண் நைசாக சம்பவ இடத்தை விட்டு சென்று., அங்கிருக்கும் பண்ரூட்டி பேருந்தில் அமர்ந்தார். பேருந்து நிலையத்திற்கு காவல் துறையினர் விரைந்ததும்., அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் அவரது பையை சோதனை செய்த போது அதற்குள் ரூ.69 ஆயிரத்து 700 இருந்துள்ளது. மேலும்., 15 ஏ.டி.எம் கார்டுகள் இருந்துள்ளது. 

மொத்த தொகையில் ரூ.2 ஆயிரம் மதிப்பில் 33 கள்ள நோட்டுகளை., ரூ.ஐநூறு மதிப்பில் 5 கள்ள நோட்டுகளை., ரூ.200 மதிப்பில் 6 கள்ளநோட்டுகளும் இருந்துள்ளது. அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில்., சிதம்பரத்தில் இருக்கும் மாரியப்பா நகரை சார்ந்த நந்தகுமாரின் மனைவி பரணி குமாரி (வயது 35) என்பதும்., இவர்கள் இருவருக்கும் ரூபிகா மற்றும் சிவப்ரியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. 

மேலும்., பரணிகுமாரி சிதம்பரத்தில் இருக்கும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ.பட்டம் பயின்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. பரணிகுமாரியின் கணவர் வியாபாரம் செய்து வந்த நிலையில்., ஏற்பட்ட நஷ்டத்தில் வாங்கிய கடன்கள் அனைத்தும் பிரச்சனையாக மாறி., மன வேதனை அடைந்து செய்வதறியாது திகைத்த நிலையில்., இணையத்தின் மூலமாக கள்ள நோட்டுகளை தயாரிக்கும் கும்பல் மற்றும் கள்ள நோட்டுகளை மாற்றுவது குறித்த தகவல் கிடைத்துள்ளது.    

கள்ளநோட்டுகளை எப்படி மாற்றவேண்டும் என்பது குறித்து தெளிவாக பார்த்து தெரிந்து கொண்டு., குடும்பத்தின் கடன் பிரச்சனையை சரி செய்வதற்க்கு முடிவு செய்து கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளார். இந்த கள்ளநோட்டுகளின் தயாரிப்பிற்கு கலர் ஜெராஸ் இயந்திரம் ஒன்றையும் உபயோகம் செய்துள்ளார். இந்த விஷயத்தை கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தெரியாமல் செய்து வந்துள்ளார். 

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரூ.2 ஆயிரம்., ரூ.500 மற்றும் ரூ.200-களை கலர் ஜெராஸ் எடுத்து அசல் ரூபாய் நோட்டுகளை போன்று வெட்டியெடுத்து வைத்துள்ளார். இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு கடலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

படித்த பெண் இருந்தாலும் குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக கள்ள நோட்டு தயாரித்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அறிந்த குடும்பத்தார்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியே? எந்த விதமான பிரச்சனைகளாக இருந்தாலும் குறுக்கு வழியில் சரி செய்ய நினைத்தால் இது போன்ற பிரச்சனைகள் உடனடியாகவோ அல்லது காலம் தாழ்த்தியோ கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore a woman arrest for illegal fake money creating


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->