கடலூரில்., பள்ளி வளாகத்திலேயே ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்.! பதறிப்போன மாணவர்கள்., வாலிபரின் வெறிச்செயல்.!! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆசிரியை.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் இருக்கும் குறிஞ்சிப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அந்த நேரத்தில்., பள்ளிக்கு வந்திருந்த மூன்று மாணவர்களுடன் பள்ளியின் கதவு திறந்தவுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில்., நீளமான கத்தியுடன் பள்ளிக்குள் நுழைந்து ரம்யாவிடம் தராகரில் ஈடுபட்டார். ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரமடைந்த நபர் கத்தியின் உதவியுடன் ரம்யாவின் கழுத்தை அறுத்து., சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பதறியடித்து ஓடி., விஷயம் குறித்து வெளியே இருந்தவர்களிடம் தெரிவிக்கவே., உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., ஆசிரியை ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., ரம்யா கல்லூரியில் பயிலும் நேரத்தில் பேருந்தில் சென்று வந்த போது., ராஜசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

கல்லூரி படிப்பை நிறைவு செய்த ரம்யா., கல்லூரி படிப்பை நிறைவு செய்தும் காதலருடன் பேசி கொண்டு வந்துள்ளார். இந்நிலையில்., இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து., கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ரம்யாவின் இல்லத்திற்கு ராஜசேகர் சென்றுள்ளார். 

ரம்யாவின் பெற்றோர்கள் சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்துள்ளனர். பெற்றோரின் சம்மதத்திற்க்காக காத்திருந்த நிலையில்., ரம்யாவின் பெற்றோர்களின் அறிவுரையின் பேரில் ரம்யா ராஜசேகரிடம் பேசுவதை குறைத்து கொண்டு வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் காவல் துறையினருக்கு இருப்பதன் காரணமாக அவரை விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore a teacher killed in school campus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->