கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பான விசாரணை.! காவல் துறையினரின் அடுத்த அதிரடி நடவடிக்கை.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் உள்ள பன்னிமடை அருகேயுள்ள துடியலூர் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவரது மனைவியின் பெயர் வனிதா. இவர்கள் இருவருக்கும் ஏழு வயதுடைய பெண் குழந்தை உள்ளது. பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததை அடுத்து சிறுமியை தேடி அலைந்துள்ளனர். பல இடங்களில் தேடியும் சிறுமி காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு இருந்த நேரத்தில்., அங்குள்ள கஸ்தூரிநாயக்கன் புத்தூர் பகுதியில் உள்ள இடத்தில் சிறுமியின் பிரேதம் உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்த வழக்கு தொடர்பான சுமார் 60 க்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., நேற்று குற்றவாளியான சந்தோஷ் குமாரை அதிரடியாக காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. 

கடந்த 25 ம் தேதியதன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை அழைத்து வீட்டிற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வலியால் சிறுமி அலறவே., அவரின் கழுத்தை நெரித்ததை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடலை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். 

பின்னர் சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடுவதை அறிந்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட கூடாதென்று அவர்களுடனே சிறுமியை தேடி அலைந்துள்ளார் . பின்னர் சிறுமியின் உடலை தனது டீ-ஷர்ட்க்குள் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு முன்னதாகவே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சந்தோஷ் குமார்., சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில்., சந்தோஷ் குமாருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்போவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்து அனுமதி அளித்தவுடன் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore girl rapped and killed case police need help to court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->