பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சென்னை மாநகர பேருந்தில் பயணம்.!! தறிகெட்டு ஓடிய பேருந்து., அலறியடித்து உயிருக்கு போராடிய மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


சென்னை திருவான்மியூரில் இருந்து கிழக்கு தம்பரத்திற்கு தினமும் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்., நேற்று மதியம் திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு பெருந்தது வந்து கொண்டு இருந்தது. 

இந்த பேருந்தை ஓட்டுநர் விஜயராஜ் (38) என்பவர் இயக்கினார்., இந்த பேருந்தில் 5 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்தனர். பேருந்தானது தாம்பரம் - வேளச்சேரி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு அருகில் வந்து கொண்டு இருந்தது. 

அந்த நேரத்தில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு ஓடத்துவங்கி., சாலையோரம் இருந்த மின்கம்பங்கள்., இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மீது மோதிக்கொண்டு சென்று மின்வாரிய அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இடித்து நின்றது. 

இந்த விபத்தில் பேருந்தின் முன்புறம் உள்ள கண்ணாடி மற்றும் பேருந்தின் இடப்புற பாகங்கள் முற்றிலும் சிதைந்த நிலையில்., அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. மேலும்., மின்வாரிய அலுவலகத்தின் நுழைவு சுவர் இடிந்து விழுந்தது. 

பேருந்தில் பயணித்த 5 பேருக்கும் நல்ல வேலையாக எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை., மேலும்., சாலையோரத்தில் ஆட்கள் இல்லை என்பதாலும்,, விடுமுறை தினம் என்பதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளை அகற்றி., போக்குவரத்துக்கான வழிகளை ஏற்படுத்தி தந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai a accident due to vehicle handling problem MTC bus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->