கனமழை எதிரொலி.. பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு.!!
Important advice to govt bus driver due to heavy rain
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வள்ளியூர் அருகே ரயில்வே பாலத்தின் கீழ் அரசு பேருந்து சிக்கிக் கொண்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. பாலத்தின் கீழ் நான்கு அடிக்கு மேல் நீர் தேங்கியுள்ளதால் பேருந்து சிக்கிக் கொள்ளும் என எச்சரித்தும் மீறி பேருந்து இயக்கிய ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சுரங்கப்பாதை மற்றும் தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்ற வழியில் இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலான் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனி மலைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரியாக இருக்கின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் ஏதும் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Important advice to govt bus driver due to heavy rain