அரசு மருத்துவர்களின் அலட்சியம்…! பரிசோதனை செய்யப் படாமல் பெறப்படும் ரத்தம்…! கேள்வி கேட்டால் மிரட்டல்….! திடுக்கிடும் தகவல்கள்…! - Seithipunal
Seithipunal


 

சிவகாசியில், கர்ப்பிணிப் பெண்ணிற்கு, எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம் ஏற்றப் பட்டுள்ளது. அந்த ரத்தத்தை பரிசோதிக்காத மருத்துவர்கள்,  ரத்தம் ஏற்றியதும், அந்தப் பெண்ணிற்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அது பற்றி, அரசு மருத்துவரிடம் கேட்ட போது, “எல்லாம் சரியாகி விடும்” என்று கூலாகப் பதில் கூறி உள்ளனர். தனக்கு ஏற்பட்ட எச்.ஐ.வி. பாதிப்பிற்கு, அரசு டாக்டர்களின் அலட்சியமே, என்று  சொல்லி, அந்தப் பெண், கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

இந்தப் பெண்ணின் கணவர், கடந்த 18-ஆம் தேதி, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மனோகரனிடம், “இப்படி தவறு செய்து விட்டார்களே, இனி நான் எப்படி என் மனைவியைக் காப்பாற்றுவேன்? என்று கண்ணீருடன் மன்றாடிக் கேட்டுள்ளார்.

அதற்கு மனோகரன், “ உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள். என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்று, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், மிரட்டலாகப் பதில் கூறி உள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை அடுத்து, மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைமை மருத்துவர் சிந்தா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜ் உள்ளிட்ட 3 பேர், சிவகாசி அரசு ரத்த வங்கியில் சோதனை மேற் கொண்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் 3 மணி நேரம் விசாரணை செய்தனர்.

அப்போது, அங்குள்ள ரத்தத்தை எந்த விதத்திலும் பரிசோதனை செய்யாமல், வைத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ignorance of Government doctors and higher officers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->