சாதியை அடையாளப்படுத்தும் வேட்பாளர்களை, திமுக முன்னிறுத்துவது சாதி அரசியலா!! திராவிடத்திற்கு வந்த சோதனை!! - Seithipunal
Seithipunal


திராவிடம் என்றால் சாதி, மத இன நம்பிக்கைக்கு எதிரான கொள்கை என தந்தை பெரியாரால் வழிமொழியப்பட்டது. பெரியாரின் கொள்கை மற்றும் பெயரை சொல்லி அரசியல் செய்யும் இரு திராவிட கட்சிகள் திராவிடத்தை சிறிதும் மதிப்பதாக தெரியவில்லை என பெரியாரின் உண்மை விசுவாசிகள் குறைகூறுகின்றன.

இவ்வாறு, இருக்க திமுக மற்றும் அதிமுக சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பலகைகள் போன்றவற்றில் தொகுதி வேட்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு சாதி அடையாளத்தை வெளிப்படுத்தி பெயருக்கு பின்னால் அவர் சார்ந்த சமூகத்தின் பெயரை இணைத்து எழுதுவது வழக்கமாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பொதுவாகவே திமுகவின் மீது சாட்டப்படும் குற்றங்களில் முக்கியமானது, ''திமுகவினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது, அப்பகுதியில் உள்ள மக்கள் தொகை அதிகம் உள்ள சாதி வேட்பாளருக்கு மட்டுமே" என்பது தான்.

இது கருணாநிதி காலத்தில் இருந்தே இருப்பாதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு சாதி அடையாளத்துடன் வைக்கப்படும் பேனர் மற்றும் சுவரொட்டிகள்!! ஆகியவற்றை மற்ற கட்சியினர் படம் பிடித்து இணையத்தில் கலாய்த்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

if dmk was based on caste politics


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->