குவிந்தனர், நுாற்றுக் கணக்கான விவசாயிகள் – தமிழக அரசு 8 வழிச்சாலைக்கு, கூடுதலாக நிலத்தை கையகப்பற்றியதால்...! - Seithipunal
Seithipunal


குவிந்தனர், நுாற்றுக் கணக்கான விவசாயிகள் – தமிழக அரசு 8 வழிச்சாலைக்கு, கூடுதலாக நிலத்தை கையகப்பற்றியதால்...!

சேலம் சென்னை இடையே, 8 வழிச்சாலை அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பல விவசாய நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. இந்த சாலை வேலைகளினால், தங்கள் நிலங்களை பறி கொடுத்தவர்கள், இந்த எட்டு வழிச் சாலை திட்டத்தினை கடுமையாக எதிர்த்தனர்.

இதற்கான டென்டர், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது, அதனைச் செயல் படுத்தத் தான், தமிழிக அரசு, மும்முரம் காட்டுகிறது, என்ற குற்றச்சாட்டும், எழுந்தது.

விவசாய நிலங்களைப் பறி கொடுத்தவர்கள், நீதி மன்றத்தில் முறையீடு செய்தனர். நீதி மன்றம், எட்டு வழிச்சாலை அமைக்க இடைக்காலத் தடை விதித்தது. தற்போது, மீண்டும், அந்த எட்டு வழிச்சாலையை உருவாக்குவதற்காக, கூடுதலாக நிலம் கையகப் படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நுாற்றுக் கணக்கான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

நுாற்றுக் கணக்கான விவசாயிகள், திரண்டு வந்திருந்ததால், கலெக்டர் அலுவலகமே திணறியது. அந்தக் கூட்டத்தைக் கண்டு அதிகாரிகளே திகைத்துப் போயினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hundreds of farmers against the 8 way road


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->