தங்களை ஏற்றிச் செல்லாமல், புறப்பட்டுச் சென்ற ரயிலுக்காக, கோபம் அடைந்த மக்கள் செய்த அதிரடி காரியம்…! - Seithipunal
Seithipunal


 

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தினமும் நுாற்றுக் கணக்கான மக்கள் காரைக்குடிக்குடி வழியாக சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்குச் செல்கின்றனர். இதற்காக, அவர்கள் மதுரையிலேயே டிக்கெட் எடுத்து விடுவார்கள். பின், ராமநாதபுரம் செல்லும் ரயிலில் ஏறி, மானாமதுரையில் இறங்கி, ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி வழியாக திருச்சிக்கு செல்லும் டெமு ரயிலுக்கு மாறிச் சென்று பயணிப்பார்கள்.

தற்போது, பாம்பன் பாலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால், மண்டபத்தில் இருந்து புறப்படும் ரயில், மதுரையில் இருந்து மானாமதுரை ரயில் நிலையத்தில், காரைக்குடி வழியாகச் செல்லும் பயணிகளை எதிர்பார்க்காமல், முன்னதாகவே புறப்பட்டுச் செல்கிறது.

கடந்த சில நாட்களாக, நடைபெறும், இந்த மாற்றத்தினால், காரைக்குடி வழியாகப் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துள்ள மக்கள், மானாமதுரை வந்து ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த டெமு ரயில் இப்போதும், மதுரை ரயிலில் இருந்து வரும் பயணிகளை எதிர்பார்க்காமல் முன்னதாகவே புறப்பட்டுச் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த நுாற்றுக் கணக்கான மக்கள், மதுரை ரயிலை செல்ல விடாமல் மறித்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மானாமதுரை ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

பின்னர், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய ரயில்வே நிர்வாகம், அவர்களது பயணக் கட்டணத்தை திருப்பித் தந்தது.

இது பற்றி ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், “ரயில்களை தாமதமின்றி இயக்குமாறு, மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். அதனால், இது குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்றனர்.

இதனால், இந்தப் பிரச்சினைக்கு யார் மூலம் தீர்வு கிடைக்கும்? என்பது தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hundred of people taken immediate action


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->