மதமாற்ற கும்பலால் பாமக நிர்வாகி கொல்லப்பட்டதற்கு எச்.ராஜா ஆவேசம்!! - Seithipunal
Seithipunal


மதம் மாற்ற முயன்றவர்களை தட்டிக்கேட்ட பாமக பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காண்ட்ராக்ட் மூலம்  உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள பகுதிகளில் வேலைக்கு ஆட்களை எடுப்பது வழக்கம்.

நேற்று காலை உணவு சமைப்பதற்கு தேவையான வேலை ஆட்களை எடுப்பதற்காக அருகே உள்ள கிராமத்திற்கு ராமலிங்கம் சென்றுள்ளார். அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் ராமலிங்கத்தையும் மதம் மாறுமாறு கூறியதாக கூறப்படுகிறது.இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு அங்கிருந்தவர்கள் ராமலிங்கம் மற்றும் இருவரையும் அங்கிருந்து விலக்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலிங்கம் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தஞ்சை செல்லும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். மதமாற்றத்தை தட்டிக்கேட்ட ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் கும்பகோணத்தில் பதற்றம் ஏற்பட்டது.



இதனை கண்டித்து, பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில், "மதமாற்ற வந்த  முஸ்லிம்களிடம் எதிர்ப்பு தெரிவித்த பாமக வைச் சார்ந்த இந்து  தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் முஸ்லிம் மத வெறியர்களால் வெட்டி கொல்லப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது." என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h.raja warning about kumbakonam murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->