பாராளுமன்ற தேர்தலுக்கும், போருக்கும் சம்மந்தம் இருக்கிறது?! எச்.ராஜா அதிரடி!!  - Seithipunal
Seithipunal


எல்லையில் தாக்குதல் நடத்தப்பட காரணம் மக்களவைத் தேர்தலை நடத்தவிடாமல் சீர்குலைக்கவே என கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எச் ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று கேரளாவில் நிகழ்சி ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

அதன் பின்னர் அங்கு அவர்,''தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னனரே, போர்ச் சூழலை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் தேர்தலை நாசப்படுத்த ஆர்எஸ்எஸ் எண்ணுகிறது. 

பாஜக மக்களவைத் தேர்தலில் தனது முடிவை  கணித்துவிட்டது. எனவே, இப்படி போரை மூட்டி தேர்தலை நிறுத்த நினைக்கிறது. " என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளிக்க பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியே வான்வழித் தாக்குதலை வரவேற்றுள்ளார். கொடியேறி பாலகிருஷ்ணன் தனது பேச்சு மூலம் தான் ஒரு தகுதியில்லாத அரசியல்வாதி என்பதை நிரூபித்திருக்கிறார்.

எல்லையில் நடந்தது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மட்டுமே. போரை நாங்கள் வேண்டி விரும்பவில்லை. தேர்தல் அச்சம் கொள்ளவேண்டியது கம்யூனிஸ்ட்டுகள்தானே தவிர பாஜக அல்ல" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H.Raja tweet about election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->