ஜெயலலிதாவின் டிரைவர் எப்படி இறந்தார்…? சேலம் டி.ஐ.ஜி. கூறிய திடுக்கிடும் தகவல்…! - Seithipunal
Seithipunal


 

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலைக்கு மூளையாக செயல் பட்டவர், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் தான், என்று, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், ஒரு சேர வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த 2017 ஏப்ரல் 28-ஆம் தேதி, இரவு, சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தனகிரி பிரிவில், வாகன விபத்தில் சிக்கி பலியானார். அவரது அண்ணன் தனகால், ஆத்துார் காவல் நிலையத்தில், இது குறித்து புகார் அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து, சேலம் டி.ஐ.ஜி. செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

இறந்து போன, ஜெ. டிரைவர் கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. அவரது வயிறு, குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய அனைத்து உறுப்புகளிலும், மது அருந்தியதற்கான தடயங்கள் இருப்பதாக, பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு, தாறு மாறாக டூ வீலரில் சென்ற போது, எதிரே வந்த ரபீக் என்பவரின் காரில் மோதி, விபத்துக்கு உள்ளானார். இந்த விபத்தில், ரபீக்கின் காரும் சேதம் அடைந்துள்ளது. ரபீக்கிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜெ. டிரைவர் கனகராஜ், இறந்தது விபத்தினால் தான்.

இரண்டு வருடம் கழித்து, கனகராஜின் அண்ணன் தனபால், இது கொலை என்று புகார் அளித்துள்ளதில் ஏதோ பின்னணி இருக்கிறது, என்று அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How did Jayalalitha's driver got death?


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->