அரண்மனையில் ஒலிக்கும் மரண ஓலம்..! இராணுவமே வியக்கும் வியூகம், தமிழனது வாளின் முன், தரங்கெட்டு போன துப்பாக்கி..! - Seithipunal
Seithipunal


மன்னா..நமது விதி முடியும் இடம், இந்த ராமநாதபுர மாளிகையில் இல்லை. வெள்ளையன் சதி செய்து நம்மை வளைத்து விட்டிருக்கிறான்.

நீங்கள் தப்பிச் செல்லுங்கள். நான் இவா்களைக் கவனித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்றால், பாஞ்சைக்கு  வருவேன். இல்லா விட்டால் சேதி வரும். தாமதிக்காமல் புறப்படுங்கள்

என்று கட்டபொம்மனிடம் சொல்லி விட்டு, ஆங்கிலேய வீரா்களுடன் ஆவேசமாகப்  போர் புரியத் துவங்கினான் வெள்ளையத் தேவன்.

1798-ஆம் ஆண்டு, ஜாக்சனின் அழைப்பை ஏற்று, 22 நாள் பயணித்து, ராமநாத அரண்மனையில், ஜாக்சன் கட்டபொம்மனை ரகசியமாக அழைத்து வந்து பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறான்,

என்ற உண்மையை, ராமலிங்க விலாசத்தில் நுழைந்தவுடன் வெள்ளையத் தேவன் கட்டபொம்மனிடம் சொன்னான்.

கடைசியில் அவன் சொன்னது படி தான் ஆயிற்று. ஜாக்சன் தனது ஆட்களை ஏவி விட்டு, துப்பாக்கியால், கட்டபொம்மனையும் அவனது ஆட்களையும் சுடச் சொன்ன போது, உடனே சுதாரித்தான் வெள்ளையத் தேவன். ஊமைத்துரையிடம் சமிஞ்சை செய்து கட்டபொம்மனை அழைத்துக் கொண்டு விரைந்து போகச் சொன்னான்.

அவன் கையில் வாள்  தான் இருந்தது. அந்த வாளை விட அவனது வீரம் மிகப் பெரிதாக இருந்தது.

வாளின்  முனை போல, அவனது புத்தியும் மிகக் கூா்மையாக இருந்தது. புயலெனச் சுழன்று தன்  வாளால், துப்பாக்கி வைத்திருந்தவா்களைத் தடுமாறச் செய்தான்.

அவனைச் சமாளிப்பதற்காக மற்ற ஆங்கிலேயக் காவலா்களும் வர, இந்த சந்தா்ப்பத்தில், கட்டபொம்மன், ஊமைத்துரையுடன் குதிரைகளில் ஏறித் தப்பிச் சென்றனா். 

போர் நடந்த இடத்திலிருந்து தப்பித்த, பாஞ்சாலங்குறிச்சியின் தானாதிபதியான சுப்ரமணியம் பிள்ளை, ராமநாதபுர அரண்மனையின் மாடிக்குச் சென்று அங்குள்ள அந்தரங்க அறையில் பதுங்கிக் கொண்டார்.

வெள்ளையத் தேவனின் மூா்க்கமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள் ஆங்கிலப் படை வீரா்கள்.

 தன்னை நோக்கிச் சுட வந்த ஆங்கிலேய தளபதி கிளார்க்கின் நெஞ்சில், தன் கூா் வாளைப் பாய்ச்சினான். அவன் அலறல் ராமநாதபுர அரண்மனை எங்கும் மரண ஓலமாகக் கேட்டது.

கிளார்க்கைக் காப்பாற்ற மற்ற வீரா்கள் முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, வெள்ளையத் தேவனும், அவனது சகாக்களும் தப்பி விட்டனா்.

பாஞ்சாலங்குறிச்சி சென்றடைந்ததும், வெள்ளையத் தேவனின் வீரத்தை வெகுவாகப் பாராட்டினான் கட்டபொம்மன். அவனுக்குப் பல வெகுமதிகளை அளித்தான்.

வீர மறவனான வெள்ளையத் தேவன், கட்டபொம்மனின் வலது கரமாக இருந்தவன். கட்டபொம்மனுக்குப் பிள்ளைகள் கிடையாது. எனவே, வெள்ளையத் தேவனைத் தன் பிள்ளை போல் பாவித்தான்.

வெள்ளையத் தேவனும், அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக, மன்னன் இட்ட கட்டளையைத் தலை வணங்கி, கட்டபொம்மனுக்குப் பாதுகாப்பாக இருந்தான்.

 வெள்ளையத் தேவனுக்கு கட்டபொம்மன் தான் முன்னின்று திருமணம் செய்து வைத்தான்.  அவன் மனைவி கா்ப்பமாக இருக்கும் போது தான், பாஞ்சையில் போர் முரசு ஒலித்தது. தாமதிக்காமல் கோட்டைக்குப் புறப்பட்டான் வெள்ளையத் தேவன்.

1799-ஆம் ஆண்டு, செப்டம்பா் 5-ஆம் தேதி, கா்னல் பானா்மேன் பாஞ்சாலங்குறிச்சியில் முற்றுகையிட்ட போது, கட்டபொம்மனின் முதன்மைத் தளபதியான, வெள்ளையத் தேவன் மிக அற்புதமாக வியூகம் வகுத்தான். ஆங்கிலேயப் படையினரை கோட்டையை நோக்கி முன்னேற விட்டான். 

அவனது திட்டத்தை அறியாது ஆங்கிலேயப் படை வீரா்கள், கோட்டையின் மீது ஏறி வந்தார்கள். செங்குத்தாக இருந்த கோட்டையின் வெளிப்புறச் சுவரில் ஏறிய எதிரிகள், உள்ளே,

அந்தச் சுவா்கள் சறுக்குப் பாதையாய் இருப்பதை அறியாமல் சறுக்கி விழுந்த போது, கோட்டைக்குள் இருந்த காவல் வீரா்கள், எய்த .ஈட்டிகளால் கொல்லப் பட்டனா்.

வெள்ளையத் தேவன் வகுத்த வியூகத்தின்படி, ஆங்கிலேய தளபதிகளை முதலில் கொல்ல முனைந்து அதில் வெற்றி பெற்றான்.

வரிசையாக, ஆங்கிலேய தளபதிகள் கொல்லப் பட்டதும், பதட்டமான ஆங்கிலேயா்கள், இதற்கு காரணம் வெள்ளையத் தேவன் தான் எனக் கண்டு கொண்டனா்.

 அவன் போர் செய்து கொண்டிருந்த போது, மறைந்திருந்து ஒருவன் சுட்டதில் குருதி பொங்க பாஞ்சைக் கோட்டையைப் பார்த்துக் கொண்டே மரணம் அடைந்தான் வெள்ளையத் தேவன்.

அன்று போரில் இறந்த ஆங்கிலேய தளபதிகளின் உடல்கள், பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒட்டன்பிடாரம் என்ற கிராமத்தின் எல்லையில் புதைக்கப்பட்டு, அதன் மீது கல்லறையும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கான ஆங்கிலக் கல்வெட்டும், கல்லறையின் முகப்பில் பொறிக்கப் பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

history of kattapomman and vellaiya thevan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->