மாவீரன் காடுவெட்டி குரு அவர்களின் வரலாறு!. - Seithipunal
Seithipunal



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் ஜெ.குரு.  இவரின் தந்தை ஜெகநாதன், தயார் கல்யாணியம்மாள். இவரை குருநாதன் என்றும் அழைப்பார்கள். சொந்த ஊரான காடுவெட்டியை தன் பெயருடன் இணைத்துக்கொண்டதால் 'காடுவெட்டி குரு' என்று பெயர் வந்தது.

காடுவெட்டி குரு இவரின் மனைவி லதா, இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தையும்  ஒரு பெண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1986-இல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் காடுவெட்டி குரு.

அந்த பகுதியில் வன்னியர்களுக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் இல்லை என்பதால், வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காக காடுவெட்டி குரு அவர்களை எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் ஆகியோர், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். அவர் படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகித்து பா.ம.க-வில் வளர்ந்தார். 

பின்பு வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். இவர் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டுமுறை சட்டசபை உறுப்பினராக இருந்தவர். இவரின் பேச்சு மிகவும் துணிச்சல் கொண்ட பேச்சு அணைத்து இளைஞர்களாலும் கவரப்பட்ட ஒன்று.

பயமரியாத காடுவெட்டி குரு அவர்களை மாவீரன் காடுவெட்டி குரு என்றும் அழைத்தனர். வன்னியர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த குரு, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் குற்றவாளி என அவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் குருவிடம் கேட்டபோது, என்னுடைய மக்களுக்காக போராட்டத்தில் இறங்கியிருக்கிறேன். என்னை குற்றவாளியாக மட்டும் அல்ல, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாலும் என் மக்களுக்காக ஏற்றுக்கொள்வேன்" என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். 

             

அதிரடிப் பேச்சு, அசராத நம்பிக்கை ஆகிய குணநலன்களைக் கொண்டவர் காடுவெட்டி குரு. அவருடைய இறப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமல்ல தற்போதைய இளைஞர்களுக்கும் பேரிழப்பாக உள்ளது. பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்துவந்தார். கடந்த இரண்டு மாத காலமாக  உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காடுவெட்டி குரு. நேற்றிரவு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் இரங்கல் செய்தி கேட்டு அணைத்து இளைஞர்களும் துடித்து அவர்களது இரங்கலை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இவரின் உடலை பார்க்க தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிர கணக்கானோர் காடுவெட்டி கிராமத்தை நோக்கி சென்றுள்ளனர். மாவீரன் காடுவெட்டி குரு அவர்களின் இறுதிச்சடங்கு இன்று அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் நடைபெறவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

history of kaaduvtti guru


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->