சிலைகடத்தல் வழக்கில் முக்கிய புள்ளி அதிரடியாக கைது.!! - Seithipunal
Seithipunal


சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த வருடம் நவம்பர் 30ஆம் தேதி ஓய்வுபெற இருந்தார்.

அப்போது சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வு பெறும் பொன். மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக தொடர்ந்து செயல்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

கடந்த இரண்டு வருடங்களாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில்சோமாஸ் கந்தர், ஏழுவார் குழலி சிலைகள் செய்ததில் சுமார் 8.77 கிலோ தங்கம் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக இந்த குழு விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளியாகின.

மேலும், இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்சிலை முறைகேடு வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி இன்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், சமீபத்தில் விசாரணை மேற்கொண்டு பொன்.மாணிக்கவேல் அவர்கள், திருவாரூரில் 1,897 சிலைகள் ஆய்வு செய்யப்பட்ட போது, இதில் 5க்கும் மேற்பட்ட சிலைகள் மாற்றப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HINDU RELIGON ENDOWMENT EX COMMISSIONER ARRESTED


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->