கலாசாரத்தை சீரழிக்கும் காதலர் தினம்! போராட்டத்தில் ஈடுபட்டு இந்து அமைப்பினர் செய்த வினோத காரியம்.! - Seithipunal
Seithipunal


பிப்ரவரி 14 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும்  பல பகுதிகளிலும் காதல் ஜோடிகளுக்காக வித்தியாசமான சலுகைகளுடன், பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று காதலர்கள் அனைவரும் ஜோடியாக பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து வகை வகையான பரிசுப் பொருள்கள், ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை பரிமாறிக் கொண்டு தங்களது காதலை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் சில ஜோடியின் ஒன்றாக சுற்றுலாதலங்களுக்கு செல்வது, படத்திற்கு செல்வது. மேலும் இருவரும் ஒன்றாக  புகைப்படம் எடுத்துக் கொள்வது எனவும் காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இத்தகைய காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 மேலும் ஆட்டுக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பெற்றோர்களை அவமதித்து, கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த காதலர் தினத்திற்கு தமிழகத்தில் முற்றிலும்  தடை விதிக்க வேண்டும் என கோஷமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hindu groups married dog and goat against love


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->