2015 முதல் எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள்? அவர்களின் முதலீடு எவ்வளவு? எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? தமிழக அரசுக்கு நீதி மன்றம் கிடுக்கிப்பிடி…! - Seithipunal
Seithipunal


 

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், நிர்ணயித்த, 2 லட்சம் கோடி என்ற இலக்கைத் தாண்டி, 3 லட்சம் கோடிக்கும் அதிகமான கோடிகள் முதலீடு செய்யப் பட்டுள்ளன, என்று தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜெயலலிதா உயிருடன் முதல் அமைச்சராக இருந்த போது, இதே போல் உலக முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்றது. அப்போதும், எண்ணியதை விட, அதிக அளவிலான, முதலீடு செய்யப் பட்டுள்ளதாக அறிக்கை வெளியானது.

தற்போது, சென்னை உயர் நீதி மன்றம், இது தொடர்பாக, தமிழக அரசுக்கு கிடுக்கிப்பிடி கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது.

“2015-ஆம் ஆண்டு முதல் எத்தனை நிறுவனங்கள், எவ்வளவு முதலீடு செய்தன? அந்த நிறுவனங்களின் பெயர், அதன் செயல்பாடுகள் பற்றிய முழு விபரங்களைக் கேட்டுள்ளது.

அதே சமயம், இதற்கு முன்பாக, முதலீடு செய்தவர்களால், எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது? அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல் படுகின்றனவா? எதை அடிப்படையாகக் கொண்டு, அந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறீர்கள்? என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட கேள்விகளை முன் வைத்துள்ளது உயர் நீதி மன்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High court questioned the Tamil Nadu Govt.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->