மூக்குடைக்கப்பட்ட தமிழக அரசு ! சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! விழிபிதுங்கிபோன தமிழக அரசு!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கடந்த திங்கள் முதல், சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம், பொதுமக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கக்கப்பட கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுவதற்கு தடை விதித்து, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்க உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கலாம் என நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் பொங்கல் பரிசை அதில் செலுத்துவதை விடுத்து 8 முதல் 10 மணிநேரம் காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன?  எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பினர்.  
 
ஒரு நாளைக்கு ரூ500 சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், அரிசிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காமல் இலவசமாக வழங்குவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
இறுதியில், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கலாம் என தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுங்கள் என அரசுக்கு, நீதிமன்றம் அறிவுரை கூறியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High Court Ask Question TN Govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->