சரக்கு அடிக்கும் போது சாப்பிடக்கூடாத சைட் டிஷ்கள்..!     - Seithipunal
Seithipunal


சரக்கு அடிக்கும் போது சாப்பிடக்கூடாத சைட் டிஷ்கள்..!    

தற்போதெல்லாம் மது அருந்துவது சாதாரண நிகழ்வாகிவிட்டது. முன்பெல்லாம்  திருவிழா, திருமணம் போன்ற ஏதேனும் ஒரு நிகழ்ச்சியின் போதுதான் மது அருந்துவார்கள். ஆனால், இப்போது தினமும் மது குடிக்கும் பழக்கம் வந்து விட்டது.  இதற்கு காரணம் அரசாங்கம் தான். தமிழக அரசே மதுபான கடையை நடத்தி வருவதால் தான் இப்படி நடக்கிறது.

முன்பெல்லாம் தமிழகத்தில் மது குடிக்கும் வயது 35 ஆக இருந்தது. ஆனால் தற்போது மது 8 வயது குழந்தை கூட மது அருந்தும் அளவிற்கு தமிழ்நாடு சீரழிந்து வருகிறது. முன்பெல்லாம் மதுவை மறைத்து மறைத்து குடிப்பார்கள். ஆனால் இப்பெல்லாம் சினிமா கலாச்சாரத்தால் அதை ஒரு ஸ்டைலாக நினைத்து மது அருந்தி வருகிறார்கள்.

மதுவால் தொடர்ந்து உயிரழப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. 

சரக்கடிக்கும் பொழுது தவிர்க்க வேண்டிய உணவுப்பொருள்கள் 

எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் அறவே ஒதுக்க வேண்டும்.

பீட்சா, பாஸ்தா போன்றவற்றை சாப்பிட கூடாது. 

கொழுப்பு நிறைந்த உணவுகளான வேர்க்கடலை மற்றும் வறுத்த முந்திரியை சாப்பிட கூடாது. 

சிப்ஸ்  சாப்பிடவே கூடாது. பொதுவாகவே சிப்ஸ் உடலுக்கு கேடுதான். 

சாக்லேட்டு உள்ளிட்ட இனிப்புகளை சாப்பிட கூடாது.  
 
சரக்கு அடிக்கும் போது,  குளிர்பானங்களையோ மிக்ஸ் செய்து குடிக்காதீர்கள். 

சரக்கடிக்கும் போது காரமான உணவுகள் சாப்பிட்டால் அவ்வளவுதான். குடல் சீக்கிரமே காலி..! மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை தவிர்த்தாலே உடல் கெடுவதை கொஞ்சம் தள்ளிப் போடலாம்.

English Summary

Health TipsSeithipunal