பள்ளிக்கு செல்லா தலைமை ஆசிரியர்!! கல்வி மாவட்ட அதிகாரியின் அதிரடி முடிவு!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தொடக்கபள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்களின் வாசிப்பு திறன் குறைவாக உள்ள பள்ளிகளில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அதிகாரி கார்த்திகா தலைமையிலான குழுவினர் ஒன்று ஆய்வு செய்து வருகிறது.

கல்வராயன்மலை பகுதியில் உள்ள வெதூர் மற்றும் விளாநெல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  அந்த 2 பள்ளிகளும் பல நாட்களாக மூடப்பட்டிருப்பதும், வெதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், விளாநெல்லி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் ஆகியோர் பள்ளிக்கு வராமல் இருப்பதும் தெரியவந்தது. 

மேலும்  அவர்கள் 2 பேரும் மாணவர்களை சேர்க்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அப்பகுதி மக்களும் இந்த பள்ளிகளுக்கு தலைமைஆசிரியர்கள் வரவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இதை அடுத்து வெதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், விளாநெல்லி பள்ளி தலைமைஆசிரியர் ராஜாராம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அதிகாரி கார்த்திகா, 2 தலைமை ஆசிரியர்களையும் தமிழ்நாடு குடிமுறை அரசு பணிகள் விதிப்படிசி சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

headmaster suspended in vizhupuram district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->