பசுமை வழிச்சாலை அரசாணை நகலை எரித்த விவசாயிகள்.! 91 பேரை கைது செய்தது போலீஸ்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், சென்னை -  சேலம் இடையே எட்டு வழி பசுமைச் சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, ஏராளமான விவசாயிகள், தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக நிலம் அளவிடும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிராக போராடும் மக்களை காவல் துறையினரை வைத்து மிரட்டும் அதிகாரிகள் அவர்களை கைதும் செய்கின்றனர். 

ஆனால், மக்கள் போராட்டங்களை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எட்டு வழி பசுமைச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் ஜூலை 6-ஆம் தேதி இந்த திட்டத்திற்கான அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் படி நேற்று காலை ,திருவண்ணாமலையில் உள்ள அறிவொளி பூங்கா அருகே அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் விவசாயிகள், கம்யூனிஸ்டு கட்சியினர், மற்றும் மாதர் சங்கத்தினர் கலந்து கொள்வதற்காக வந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தி காவலர் வாகனத்தில் ஏற்றினர். அப்போது போராட்டக்காரர்கள் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை, அவ்வாறு இருக்க ஏன் எங்களை கைது செயகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது விவசாயி ஒருவர் கையில் திடீரென  பேப்பர் ஒன்றை கொளுத்தி கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து காவலாளர்கள் விவசாயி கையில் எரிந்து கொண்டிருந்த பேப்பரை பிடுங்கி எறிந்து அவரை கைது செய்தனர். மேலும் 2 பெண்கள் உள்பட 13 பேர் கைது செய்த காவலர்கள் அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், மேலும் பல விவசாயிகள் நினைவு தூண் ரௌண்டானா அருகில் வந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்தபடி அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 78 பேரை கைது செய்தனர். நேற்று நடைபெற்ற திருவண்ணாமலை போராட்டத்தில் மட்டும் 8 பெண்கள் உள்பட 91 பேரை போலிஸார் கைது செய்தது குறிப்பிடத் தக்கது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

green way protest 91 members arrested in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->