அரசு பேருந்தில் நடக்கும் அட்டூழியம்..? பாதி வழியில் விழி பிதுங்கும் பொதுமக்கள் - தொடர்ச்சியாக அரங்கேறும் அநியாயம்..! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் வழக்கமாக இயங்கிக் கொண்டிருக்கும் அரசு பேருந்துகளில் எக்ஸ்பிரஸ் என்று முன்புறக் கண்ணாடியில் ஒட்டி விட்டு அந்தப் பேருந்தினைக் கூடுதல் கட்டணத்திற்கு இயக்கி வருகிறது.

தனியார் பேருந்துகளில் ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூர் செல்ல இருபத்தி ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரசுப் பேருந்தில் 23 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதே பேருந்து எக்ஸ்பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக 35 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அரியலூர் இருந்து ஜெயங்கொண்டம் வரை 30 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ- மாணவிகள் எனப் பல தரப்பட்டவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அரசு பேருந்து கட்டணம் தெரிவிக்கப்படவில்லை. பாதி தூரத்தில் கட்டணத்தைத் தெரிவிக்கும் போது கையில் பணம் இல்லாமல் பாதி வழியில் இறக்கி விடப்பட்டு மீதம் உள்ள தூரத்தை நடந்த வரும் நிலை உருவாகி உள்ளது.

பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டு உள்ளனர்.அது போன்று இடையில் எங்கும் நிற்காது என்று உத்தரவாதம் செய்து எடுத்த பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்தால் எங்கும் நிறுத்திப் பயணிகளை ஏற்றி வருகின்றனர்.

ஏறிய பிறகு கட்டணம் 15 ரூபாய், 25 ரூபாய், 35 ரூபாய் என்று வசூலிப்பதுடன் பயணிகளிடம் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

இந்நிலையைப் போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt express bus fare sudden increase


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->