தனி ஒருவராக போராட்டத்தில் இறங்கிய அரசு பேருந்து நடத்துனர்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தவர் ரமேஷ் குமார். கடந்த 3 மாதத்திற்கு முன் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மாற்றப்பட்டார்.

இவர் அவசர நேரங்களில் விடுமுறை கேட்டால் போக்குவரத்து அதிகாரிகள் விடுமுறை வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. தனது விடுமுறை நாளில் பணி செய்ய வற்புறுத்துவதாகவும், அதிகாரிகளுக்கு தேவையானவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாகவும் ரமேஷ் குமார் குற்றம் சாட்டி வந்தார்.

எனவே பாரபட்சம் காட்டி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரமேஷ் குமார் திருப்பூர் 2-வது போக்குவரத்து பணிமனை முன் திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

நேற்று இரவு வரை இந்த போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து திருப்பூர் காவல் துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் நடத்துனர் ரமேஷ் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி சுமூக தீர்வு காண்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரமேஷ் குமார் உண்ணாவிரதத்தை விலக்கி கொண்டார். அரசு பேருந்து டெப்போ முன் நடத்துனர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus conductor strike in tirupur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->