விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த ஜி.கே.வாசன்!! தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!!  - Seithipunal
Seithipunal


நேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் 11மணியளவில் சந்திக்கிறார் என்ற தகவல் வெளியானது. கூட்டணி அரசியலுக்காக பார்க்கப்போனவர்கள் எல்லாம் உடல்நிலை விசாரிக்க வந்ததாக சொல்லிவிட்டு சென்றனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்த பிறகு, உண்மையிலேயே உடல்நிலை விசாரிக்க போகிறவரை அரசியல் பேச போகிறார் என தவறான செய்திகளை கூட்டணி அமையாதவர்களின் ஆதரவு ஊடகங்கள் பரப்ப ஆரம்பித்து விட்டது. 

இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்த பிறகு, இரண்டு கட்சி தொண்டர்களிடையே ஒரு பிணைப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக தலைவர்கள் சந்திப்பது, இயற்கையான ஒன்று தான். கடந்த முறை கூட்டணி அமைந்த போது கூட சந்திக்காத டாக்டர் ராமதாஸ் தற்போது உண்மையிலே விஜயகாந்தின் உடல்நிலையை விசாரிக்க செல்கிறார். 

மேலும் தொகுதிகளின் பட்டியல் ஏற்கனவே உறுதி ஆன நிலையில், தற்போது புதியதாக கிருஷ்ணகிரி தொகுதியை மையபடுத்தி குழப்பத்தை உண்டாக்கி உள்ளனர். ஆனால் பாமக கொடுத்த பட்டியலில் கிருஷ்ணகிரி தொகுதியே இல்லை என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

இதனை தொடர்ந்து இன்று, மாலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான ஜி.கே.வாசன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.  

அதன்படி தற்பொழுது தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமாக தலைவர் ஜி,கே.வாசன் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளார். மேலும், அவர் " உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்துள்ளேன்" என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

அதிமுக கூட்டணியில் இருகட்சிகளும் உள்ள நிலையில், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்து தொண்டர்களுடன் இணக்கமான சூழலை உருவாக்கி பிரச்சாரம் செய்வதற்கு இந்த சந்திப்பு அடிப்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gkvasan met with Dmdk vijayakanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->