செல்போனில் பேசிய இளம்பெண் ! காப்பாற்ற வந்தவர்களையும் உயிருக்காக தத்தளிக்கவைத்த விபரீதம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சின்ன பிடாரியூரில் வசித்து வருபவர் சங்கீதா. 28 வயது நிறைந்த இவர் ஈரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய கணவர் நவீன். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சங்கீதாவுக்கும், நவீனுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று மாலை  தன்னுடைய வீட்டிற்கு அருகில் கிணற்று பகுதியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த சங்கீதா திடீரென செல்போனோடு கிணற்றில் விழுந்துள்ளார்.

இந்நிலையில் உயிருக்கு போராடிய சங்கீதாவை கண்ட, அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, கதிரேசன்  ஆகியோர் காப்பாற்ற கிணற்றில் குதித்தனர்.

           

இந்நிலையில் படிகள் இல்லாத கிணற்றில் 3 பேரும் மேலே வர முடியாமல் தத்தளித்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்அளிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றுக்குள் தவித்த 3 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். 

அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக 3 பெரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தகவலறிந்த போலீசார்  இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl fall into well while talking mobile


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->