கந்து வட்டிக்கார்கள், கொலை மிரட்டல் விடுத்ததால்! கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண்!! - Seithipunal
Seithipunal


மதுரைக்கு அருகே உள்ள மேலுார், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவியின் பெயர்  தாஹிராபானு (வயது 43).
    
இவர் , தான் வசித்து வந்த பகுதியில் உள்ளவர்களிடம், சுமார் 1 லட்சம் வரை வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். இந்த கடன் விவகாரம், அவரது கணவருக்குத் தெரியாது.
    
கடன் கொடுத்தவர்கள், தாஹிராபானுவிடம், அடிக்கடி பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். இதனால், தாஹிராபானு, கடந்த 12-ஆம் தேதி, மதுரை எஸ்.பி. மணிவண்ணிடம் புகார் அளித்தார்.
    
அதனால், பணம் கேட்டு மிரட்டியவர்களை, எஸ்.பி. அலுவலகத்திற்கு வரவழைத்து, போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
    
இருப்பினும், கடன் கொடுத்தவர்கள், மீண்டும், தாஹிராபானுவிடம் பணம் கேட்டு மிரட்டினர். பணம் தரவில்லை என்றால், அவரைக் கொலை செய்து விடுவதாகவும் கூறி உள்ளனர்.
    
இதனால், நேற்று, இது குறித்து, கலெக்டரிடம் புகார் அளிக்க, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார், தாஹிராபானு. அப்போது, கலெக்டர் இல்லாததால், அவரது உதவியாளர், தாஹிராபானுவின் புகார் மனுவினைப் பெற்றுக் கொண்டார்.
    
பின், கலெக்டர் அலுவலக வாயிலுக்கு முன்பாக வந்த தாஹிராபானு, தன்னுடைய பையில், வைத்திருந்த மண்ணெண்ணையை, தன் உடல் மீது ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
    
இதனைக் கண்டு, அங்கு காவலுக்கு இருந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தினர். பின், இது குறித்து விசாரிக்க, மேலுார் காவல் நிலையத்திற்கு, அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl burnt out at collector office


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->