இதுவரை வந்துள்ள கஜா புயல் நிவாரண நிதியை அரசு வெளியிட்டது! - Seithipunal
Seithipunal


கடந்த 16 ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக  நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயலால் பல இலட்ச மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

இந்த புயலால் பாதித்த மக்கள் அனைவரும் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும், சினிமா பிரபலங்களும், தன்னார்வலர்களும் முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அந்த வகையில் அரசியல் கட்சியினர், திரையுலகினர், தொண்டு நிறுவங்களை சேர்ந்தோர், தனியார் நிறுவனத்தினர், பொதுமக்கள் என நன்கொடை அளித்து வந்தனர். இவ்வாறு, பொதுமக்கள் நேரிடையாகவும், ஆன்லைன் மூலமாகவும் அளித்த 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் நிவாரண நிதியாக வந்துள்ளது என அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gaza Storm Relief Funds


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->