ஒரு இஞ்சின் வாங்க முடியுமா அதுல...? சல்லி காசுக்கு கூட பிரயோஜனம் இல்ல... அரசுக்கு மக்கள் கொடுத்த சாட்டையடி..? - Seithipunal
Seithipunal


பாதிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது, கூடுதலாக வழங்கவேண்டும் மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நலச் சங்க மாநிலச் செயலாளர் மதமிழக மீன்வளத்துறை அமைச்சருக்கு இதுகுறித்து கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். 

அதில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் கள்ளிவயல் தோட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில், 191 விசைப்படகுகள் முற்றிலும் சேதம் அடைந்ததாகவும், 55 விசைப்படகுகள் பகுதி சேதமடைந்ததாகவும் அரசுத்துறை சார்பில் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் சில படகுகள் கடற்கரை ஓரம் மணலில் புதைந்து உள்ளதால் மீட்கும் போது ஏற்படக்கூடிய சேதத்திற்கு ஏற்ப அதை மறு ஆய்வு செய்யவும் அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.

தற்போது 14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட விதிப்படி படகு முழு சேதத்திற்கு ரூ.5 லட்சமும் பகுதி சேதத்திற்கு ரூ.3 லட்சமும் தருவதாக சொல்லப்படுகிறது.

அதிலும் முழுத் தொகையை மீன் வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் படகின் உரிமையாளர் பெயரில் வங்கிக் கணக்கில் போடுவது ஏற்புடையது அல்ல. தற்போது உள்ள சூழலில் ஒருபடகு கட்டுவதற்கு சுமார் ரூ.30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை செலவாகும் என மதிப்பீட்டு பட்டியல் கொடுத்துள்ளனர்.

படகிற்காக அரசு ஒதுக்கிய ரூ.5 லட்சத்தில் ஒரு என்ஜின்கூட வாங்க முடியாது. இந்த பணத்தில் படகு கட்டுவது சாத்தியம் இல்லை என்பது அரசுக்கு தெரியாதா? மேலும் அரசு ஒதுக்கிய பணத்தை மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் உரிமையாளர் பெயரில் போடுவது மீனவர்கள் எந்த வகையிலும் பயன்படுத்த முடியாது.

காரணம் ஏற்கனவே வார்தா,ஒக்கி புயலுக்கு மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் எடுக்கமுடியாமல் வங்கியிலே கிடக்கிறது. எனவே தற்போதுள்ள விலைவாசிக்கேற்ப, பழைய ஆணையைமாற்றி, படகுகள் வாங்க கூடுதல்நிவாரணம் வழங்குவதோடு, நிவாரணப் பணத்தை பயனாளிகளின் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்.

கடற்கரையில் புதைந்துகிடக்கும் படகுகளை, மீட்டு அப்புறப்படுத்த உதவ வேண்டும். மல்லிப்பட்டினத்தில் புதிதாக அமைக்கப் பட்டு வரும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படகுகளும் சேதமடைந்துள்ளன.

எனவே தூண்டில் வளைவு அமைத்து தருவதன் மூலம் படகுகள் இயற்கை சீற்றத்தால் சேதமடைவது தடுக்கப்படும். எனவே அரசுஅதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் டெல்டா பகுதி புயல் பாதிப்பிற்காக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தமிழக அரசிடம் வழங்கும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமேபயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gaja-storm-approaching-effect


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->