ஆத்திரமா வருது... அரசுக்கு கெடுவிதித்த மக்கள்.. இன்னும் ஓரிரு நாட்களில் அரங்கேற இருக்கும் சம்பவம்..? கதிகலங்க விடும் முடிவு.! - Seithipunal
Seithipunal


கஜா புயல் அடித்து 26 நாட்களைக் கடந்துவிட்டது. நகர்புறங்களுக்கும், ஒரு சில கிராமப் பகுதிகளில் மட்டுமே இதுவரை வீடுகளுக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில மற்றும்வெளி மாவட்டங்களைச் சேர்ந்தமின் ஊழியர்கள் படிப்படியாக சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதனால், மின்சீரமைப்புப் பணிகளில் ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்பொழுது இல்லை. மிகக்குறைந்த ஊழியர்களைக் கொண்டு மிகவும் மந்தமாகவே பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆட்கள் பற்றாக்குறையாலும், அதிகாரிகளின் கவனக்குறைவாலும் மின் இணைப்பில் பல் வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.

மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் புயலில் தரையில் விழுந்து கிடந்த மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

பெரும்பாலான கிராமப் பகுதிகளுக்கு மின்சாரம் கிடைக்காததால் மக்கள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். புயல் வீசியஆரம்ப நாட்களிலாவது டேங்கர் லாரிகள் மூலமாக அவ்வப்போது தண்ணீர் விநியோகம் நடைபெற்றது.

ஆனால், தற்பொழுது அத்தகைய உதவிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய அவலம் தொடர்கிறது.

பெரும்பாலான நகர்புறப் பகுதிகளில் இரவு நேரத்தில் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படுகிறது. பகலில் மின்சாரம் இல்லாமல் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து முடங்கிக் கிடக்கின்றன.

இதனால்,பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல நாட்களாக வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.எனவே, அமைச்சர்களும் அதிகாரிகளும் வெற்று அறிக்கை தருவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.

மாணவர்களின் நலன்கருதி உடனடியாக கிராமப்புறங்களில் உள்ளஅனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண் டும். நகர்புறங்களில் 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் இணைப்பு வழங்கப்படாத கிராமங்களுக்கு தினந்தோறும் டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரிருநாட்களில் நிலைமை சரிசெய்யப்படாவில்லை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கமுடியாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gaja cyclone affected ares peoples protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->