பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசால் விலையில்லா நலத்திட்டங்களின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலணிகளும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலேந்திகளாகவும் அதாவது ஷூவாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

அப்படி வழங்கப்படும் காலணிகள் மற்றும் காலேந்திகள் மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவெடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் செயல்படும் தன்னார்வலர்களை பயன்படுத்த பார்வையில் காணும் அரசுச் செயலாளர் அவர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் எடுக்கும் விவரங்களின்படி விலையில்லா நலத்திட்டப் பொருள்களான காலணிகள் மற்றும் காலேந்திகள் உருவாக்குவதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free shoes to school student tn govt order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->