தூத்துக்குடியில் இலவச சட்ட உதவி மையம்..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு, தடியடி ஆகியவற்றால் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுக்கு சட்ட உதவிகள் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும், அரசு நிதி உதவியை பெற்று தருதல், வழிகாட்டுதல் ஆகியவற்றிக்காக மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் சார்பில் அரசு மருத்துமனையில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சரியான தகவல்களை கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free legal aid center in thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->