மேற்பார்வை பொறியாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயிகள்!! பெரம்பலூர் மாவட்ட கூட்டத்தில் சலசலப்பு!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா அவர்கள் தலைமை தாங்கினார்.

பின்னர், அவர் மின் நுகர்வோர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டு, குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் விவசாயிகளின் சார்பில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். 

அதில், 'அதிகாரிகள் மின் நுகர்வோர்கள் குறைதீர்கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், மேலும், கடந்த 2000-ம் ஆண்டு விவசாய மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து காத்திருக்கின்றனர். முதலில் அதிகாரிகள் எதற்காக மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணங்களை கூற வேண்டும்.

பின்னர், அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. பின்னர், மின்நுகர்வோர்கள் மற்றும் இதேபோல் விவசாயிகள் ஆகியோர் மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுக்களை 
கொடுத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து பல  விவசாயிகள் தங்களின் நியாயமான மின் இணைப்பு கோரிக்கைகளுக்கு தாமத படுத்துவதும், அதீத அலைச்சலுக்கு உள்ளாக்குவதும் ஏன் என கேட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free electrical provide for farmers in perambalur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->