பெண்களின் பாதுகாப்பிற்காக, தமிழகம் முழுதும் செயல்படும் '181 ' இலவச தொலைபேசி எண்.!! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் மற்றும் அநீதிக்கு எதிராக செயல்படும் இலவச சேவை மையத்தினால் மகிழ்ச்சியடைந்த பெண்கள் மற்றும் பெற்றோர்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பெண்களின் பாதுகாப்பிற்காக '181' இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பட்டு வந்தது.

கடந்த அக்டோபர் முதல், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 5 வக்கீல்கள், 5 மனநல ஆலோசகர்கள் மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர் பணியமர்த்தப்பட்டு, 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு, காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் போன்ற அனைத்து உதவிகளுக்கும் இந்த எண்ணை அழைக்கலாம் என்றும்,

தெரிவிக்கப்படும் புகார்களை அதிகாரிகள் பதிவு செய்து வைக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, 10-ந்தேதி(நாளை) இந்த '181' இலவச தொலைபேசி எண்ணை தொடங்கி வைக்க உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free call center for girls


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->