விவசாயிகள் மிரட்டல்..! தண்ணீர் திறக்கவில்லை என்றால்  அலுவலகத்தை பூட்டுவோம்.!! அதிர்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர்!!!  - Seithipunal
Seithipunal


இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில், மாவட்ட அளவிலான விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கடவூர், கிருஷ்ணராயபுரம், மண்மங்கலம் ஆகிய 6 தாலுக்காக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமராவதி ஆற்றின் கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அமராவதி ஆற்று பாசன விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை செய்தனர்.

  

அதனைத் தொடர்ந்து,விவசாயிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தண்ணீர் திறக்காத பட்சத்தில், கடைமடை வரை ஆகஸ்ட் மாதம் விவசாயத்திற்கு தரவில்லை என்றால், அங்குள்ள அமராவதி ஆற்றின் வடிநில அதிகாரிகள் அலுவலகத்திற்கு  பூட்டு போடுவோம், மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு  சிறைபிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

formers warned to district collector for water problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->