டர்மெரிக் பவுடர் வாங்கியதில் நடந்த பலே மோசடி..? திருப்பூர் டூ தூத்துக்குடி கனெக்சன்.. ஆனால் 'நோ' கலெக்சன்.! - Seithipunal
Seithipunal


பவுடர் வாங்கி விட்டு ரூ. 6 லட்சம் பணம்மோசடி செய்ததாக தூத்துக்குடி ஷிப்பிங்நிறுவன அதிபர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கடத்தூர் கொக்கிரெட்டியார்புரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் செந்தில்குமார் (38). இவர் தன்னிடம் டர்மெரிக் பவுடர் இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.

இதை பார்த்த தூத்துக்குடி பெரைரா தெருவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் ஆன்லைனில் பவுடர் வேண்டி விண்ணப்பித்தாராம்.

பின்னர் 9350 கிலோ பவுடர் சுமார் ரூ. 8 லட்சத்திற்கு வாங்கியுள்ளனர். இதற்கு கிஷோர் ரூ.2 லட்சம் பணமாகவும் மீதி ரூ. 6 லட்சத்திற்கு காசோலையும் அளித்துள்ளார்.

அந்த காசோலை பணம் எடுக்க போட்ட போதுஅதில் பணமில்லை என திரும்பிவந்துள்ளது. இது குறித்து பல தடவை செந்தில்குமார்,கிஷோரிடம் கேட்டதற்கு அவர் பணம் தராமல் காலம் கடத்தி வந்தாராம்.

இச்சம்பவம் குறித்து செந்தில்குமார் தூத்துக்குடி எஸ்பி முரளிரம்பாவிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவை விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்பி., உத்தரவிட்டார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிந்து ஷிப்பிங் நிறுவன அதிபர் கிஷோர், மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முத்தமிழ்துரை ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து தேடிவருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

forgery happened tiruppur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->