இதுக்குனே ஏடிஎம் முன்னாடி வந்து நிக்கறாங்க.. கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை இப்படி இழந்து விடாதீர்கள்..! - Seithipunal
Seithipunal


ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துத் தர உதவுவதாகக் கூறி ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை கண்ணம்பாளையத்தை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். சமீபத்தில் இவர் சிங்காநல்லூர் அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் பணம் எடுக்க உதவுவதாகக் கூறியுள்ளார். இதைநம்பிய முருகானந்தம் தனது ஏடிஎம் அட்டையை அந்தவாலிபரிடம் கொடுத்துள்ளார். பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு அந்த வாலிபர் சென்றுவிட்டார்.

இந்தச் சூழலில், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக முருகானந்தத்திற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில்கோவை சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது முருகானந்தத்தின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கபில், கோவையை சேர்ந்த ஜான் ஜோசப் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும், ரூ.4 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சம்பவத்தன்று முருகானந்தத்தின் ஏடிஎம் அட்டையை வாங்கிபணம் எடுத்துக் கொடுத்து உதவுவது போல் நடித்த வாலிபர்கள், அவரது பின் நம்பரை தெரிந்து கொண்டனர்.

பணம் எடுத்துக் கொடுத்த பின்னர், முருகானந்தத்தின் ஏடிஎம் அட்டையைக் கொடுக்காமல் போலியான வேறொரு அட்டையைக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ரூ.15 ஆயிரத்தைக் கொள்ளையடித்து சுற்றித் திரிந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

forgery happened near atm


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->