ஆயுத பூஜை, முகூர்த்த நாட்கள் எதிரொலி - திடீரென உயர்ந்த மல்லிகை பூ விலை.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விஜயதசமி கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது. இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் வரை ஒரு கிலோ மல்லிகை 750 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று முதல் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. 

நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பிச்சிபூ 800 ரூபாய்க்கும், கெந்தி 50ரூபாய்க்கும், சேவல்கொண்டை பூ 80 ரூபாய்க்கும், அரளிபூ 350 ரூபாய்க்கும், கனகாம்பரம் நேற்று 500-க்கு விற்பனையான நிலையில் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல், சாமந்தி, சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களின் விலையும் நேற்றை விட. இன்று சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதபூஜை, விஜய தசமி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, நேற்று முதல் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க காணப்பட்டது. 

இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், நவராத்திரி, சரஸ்வதி பூஜை என்று மல்லிகைப் பூக்களின் விலை இருமடங்கு உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flower price increase in flower market for ayudha pooja


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->