அரசு பள்ளி மாணவர்கள் விழுந்தெழுந்து ஓட்டம்! யானைகள் செய்த அட்டகாசம்! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள கிராமம்  பன்னிமடை. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக அரசு மேல் நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் அந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அருகில் சுற்று வட்டார பகுதிகளின் கிராமத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் யானைகளின் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. கிராமங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அச்சுறுத்தி வருகின்றனர். இரவு நேரங்களிலும் கிராமத்தில் உள்ள மக்களை பயமுறுத்தி வருகின்றன. இதனால் மக்கள் எப்பொழுதும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டிய சூழ்நிலை அங்கு உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு இந்த கிராமத்தில் புகுந்த காட்டுயானை அருகில் இருந்த அரசு உயர்நிலை பள்ளிக்குள் புகுந்தது. அந்த பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துவிட்டு சென்றுள்ளது. இன்று காலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுவர் இடிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, தலைமையாசிரியர் கூறுகையில், மறுசுவர் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flooding of government school students Elephants made


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->