நாகை மாவட்ட மீனவர்கள் சிறை!! மீனவ மக்கள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்பிடிக்கும் கருவிககளை அபகரித்து செல்வதும், அவர்களை பிடித்து சென்று சிறையில் அடைப்பதும் வழக்கமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் 7 மீனவர்களை சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்கரைப்பேட்டையில் உள்ள  டாட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(42) என்ற மீனவர்.

இவருக்கு உரிமையான பைபர் படகில் சீனிவாசன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 7 பேர் கடந்த 7-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை கடுவையாற்றங்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நேற்று மாலை வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர். 

பின்னர் அவர்கள் நாகை மீனவர்களின் படகில் ஏறி எல்லை தாண்டி வந்து, மீன் பிடித்ததாக கூறி 7 பேரையும் சிறைபிடித்துள்ளனர். சிறைப்பிடித்த மீனவர்கள் திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாகை மாவட்ட மீனவ மக்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மீனவர்களை சிறை பிடித்ததால் அந்த கிராமமே சோகத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fisherman arrested in nagai district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->