ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்கள் பறிமுதல்.! கும்பகோணத்தில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் கலந்து விற்பனை செய்து வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதனால் விற்பனையாளர்களுக்கு நல்ல லாபமும், இதனை பயன் படுத்தும் மக்களுக்கு, உடல்நலக்குறைவும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
    
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நான்குரோடு செல்லும் சாலையில், புதிய மீன்மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும் இந்த மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், கும்பகோணம் மீன்மார்க் கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது  இதைதொடர்ந்து, தஞ்சை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள், இன்று அதிகாலை 6 மணியளவில் மீன்மார்க்கெட்டில், ஒவ்வொரு கடையாக சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த மீன்களை அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு சில கடைகளில் ‘பாம்லீன்’ எனப்படும் ரசாயனம் மீன்களில் கலந்து விற்பனை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அந்த மீன்களை தனியாக பிரித்து பறிமுதல் செய்தனர். இதில் ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அழுகிய மீன்களையும் சில இடங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காலை நேரத்தில், அதிகாரிகள் திடீர் சோதனை செய்ததால் மீன் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சில கடைகளில் மீன்களை சோதனை நடத்திய போது, இந்த மீன்கள் எங்களுடையது இல்லை என்று வியாபாரிகள் கூறியதால், பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை யாருடையது என்பதை அதிகாரிகளால் அறிய முடியவில்லை. கும்பகோணம் மீன்மார்க் கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து சோதனை செய்ததில் 100 கிலோவுக்கும் மீன்களில் பாம்லின் என்ற ரசாயனத்தை தடவியிருந்தது அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

மேலும், பொதுவாக மீன்களை ஐஸ்பெட்டியில் வைத்து விற்பனை செய்யவேண்டும். அப்போது தான் மீன்கள் கெடாமல் இருக்கும். ரசாயனம் கலந்த மீன்களை வாங்கி சாப்பிட்டால் குறிப்பாக புற்றுநோய், ஒவ்வாமை போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. பாம்லீன் ரசாயனத்தை பயன் படுத்தினால் மீன்கள் கெடாமல் அப்படியே மாதக் கணக்கில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fisheries officials seized 100km of chemically decomposed fish


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->