சென்னை மக்களே!! தீவு திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது.!! - Seithipunal
Seithipunal


உலக அளவில் சிவகாசி பட்டாசு  பிரசித்தி பெற்றதாக இருந்தாலும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. பட்டாசு புகையால் காற்று மாசடைவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பட்டாசுகளை 2 மணி மட்டுமே வெடிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இதனால் பொதுமக்கள் மத்தியில் பட்டாசு வெடிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் குழந்தைகள் மத்தியில் பட்டாசுகள் மீதான ஆர்வம் குறையாததால் அவர்களின் நம்பியே பட்டாசு தொழில் நடந்துவருகிறது. 

இந்த வருடம் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் பலரும் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் தீபாவளிக்காக புத்தாடை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் துணி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் சென்னை மக்கள் பட்டாசு வாங்கும் வகையில் ஆண்டுதோறும் தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அமைக்கப்படும் பட்டாசு கடைகள் இந்த ஆண்டும் வழக்கம் போல் அமைக்கப்பட்டுள்ளது.

கடைகள் அமைக்கும் பணி மும்முறமாக நடைபெற்று அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. சென்னை மக்கள் தீபாவளிக்கு சிரமமின்றி பட்டாசுகள் வாங்க தீவுத்திடலில் சுமார் 55 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Firecrackers sales starts from today in Chennai theevuthidal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->