குடிசை வீடு எரிந்து நாசம்..! திருவிழாவிற்கு சென்றதால் வந்த விபரீதம்..!! - Seithipunal
Seithipunal


ஒரத்தநாடு அருகே சமயன்குடிகாடு கிராமம் ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி மல்லிகா ( 40).

இவர் நேற்று அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு இரவு சென்றிருந்தார். அப்போது அங்கு நடந்த கலை நிகழ்ச்சியை அவர் பார்த்துக்கொண்டிருந்த போது அவரது தெருவை சேர்ந்த சிலர் ஓடிவந்து வீடு தீப்பற்றி எரிவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா விரைந்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அவர் ஒரத்தநாடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து ரூ.25 ஆயிரம் மதிப்பில் சேதம் உண்டானது. இது மல்லிகை அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English Summary

fire accident in orathanadu

செய்திகள்Seithipunal