கும்மிருட்டில் குலை நடுங்கிய பொதுமக்கள் - இரவு 11 மணி முதல் 3 மணி வரை தூக்கத்தை கொடுத்த ரணகள சம்பவம்..! - Seithipunal
Seithipunal


 தேனி அருகே தனியார் எண்ணெய் ஆலையில் கொதி கலனில் இருந்து தீப்பொறி பரவி பலத்த தீ விபத்து ஏற்பட்டது.

தேனி, ரத்தினம் நகரில் தேனியைச் சேர்ந்த கருணாகரன் என்பவருக்குச் சொந்தமான எண்ணெய் ஆலை, அட்டைப் பெட்டி உற்பத்தி நிறுவனம் உள்ளது.

இந்த நிலையில், எண்ணெய் ஆலையில் உள்ள கொதிகலனில் இருந்து சிதறிய தீப்பொறி அருகே உள்ள அட்டைப் பெட்டிகளில் பரவி தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி ஆலை ஊழியர்கள் பாண்டியன், பால்பாண்டியன் ஆகியோர் காயமடைந்தனர்.

ஆலையில் பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் உள்பட 46 பேர் ஆலையில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர்.

ஆலையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, வத்தலகுண்டு, மதுரை ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய பணியாளர்கள் 10 மணி நேர போராடி அணைத்தனர்.

எண்ணெய் ஆலையில் பலத்த தீ விபத்து ஏற்பட்டதால் ரத்தினம் நகர், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு 11 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

தீ விபத்து நடைபெற்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், திண்டுக்கல் டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident happened near theni


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->