என்ன ஒரு நேர்மை .!டிக்கெட் எடுக்க சொன்னதால் குழந்தையை பஸ்சிலேயே விட்டு சென்ற தந்தை.,அதிர்ச்சியடைந்த கண்டக்டர் .! - Seithipunal
Seithipunal


இரண்டரை வயது குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்னதால் குழந்தையை பஸ்சிலேயே தந்தை விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இதயதுல்லா. இவர் அரசு பேருந்தில் தனது இரண்டரை வயது மகன் முகமது உசேனுடன் திருவாரூருக்கு சென்றுள்ளார் .

அப்போது கண்டக்டர், அவரது மகனுக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ‘’குழந்தைக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது என்று அவர் கூறியதை கண்டக்டர் ஏற்க மறுத்து 3 வயதிற்கு மேல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

3 year baby க்கான பட முடிவு

இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

 இதையடுத்து பிறப்பு சான்றிதழை  கொடுத்துவிட்டு குழந்தையை அழைத்துச்செல்வதாக கூறிவிட்டு இதயத்துல்லா குழந்தையை பஸ்சிலேயே விட்டு இறங்கி சென்றுவிட்டார்.  இதன்பிறகு அங்கிருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ள  பேரளம் காவல் நிலையத்தில் கண்டக்டர் குழந்தையை ஒப்படைத்து விவரத்தை கூறினார். 

          government bus n mayilapur க்கான பட முடிவு
இதனிடையே குழந்தையின் பிறப்பு சான்றிதழுடன் அங்கு வந்த இதயதுல்லா  போலீசாரிடம் பிறப்பு சான்றிதழை காண்பித்து, எனது குழந்தைக்கு இரண்டரை வயது தான் ஆகிறது. வலுக்கட்டாயமாக டிக்கெட் எடுக்க கூறிய கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .
 

இச்சம்பவம் பயணியர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father leave the child in bus to ask the ticket to it


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->