இபிஎஸ்க்கு எழுதப்பட்ட போலி அறிக்கை.. குழப்பத்தை ஏற்படுத்தியது யார்? சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் வேட்பாளர் பாக்யராஜ் நிறுத்தப்பட்டதில் விருப்பமில்லை என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அ.தி.மு.க எம்.பி. சி.வி. சண்முகம் எழுதியது போல சமூக வலைதளத்தில் பரவிய அறிக்கையால் பெரும் பரபரப்பு நிலவியது. 

இந்நிலையில் அந்த அறிக்கை போலியானது எனவும் அதனை வெளியிட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.வி. சண்முகம் விழுப்புரம் டி.எஸ்.பி இடம் புகார் அளித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் பரவி வரும் போலியறிக்கையில், விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் நிறுத்தப்பட்டதில் தனக்கு விருப்பம் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போலியான கடிதம் உண்மை என நம்பி விழுப்புரம் அ.தி.மு.கவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது போலியான கடிதம், வாக்காளர்களை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டது என அ.தி.மு.க வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும் சி.வி. சண்முகம் அளித்தது போல பொய்யான அறிக்கை தயார் செய்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake report written to EPS CV Shanmugam complaint


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->